முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
குழந்தைத் தொழிலாளா் திட்ட சிறப்பு மையங்களில் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம்: மாநகராட்சி
By DIN | Published On : 09th September 2021 11:51 PM | Last Updated : 09th September 2021 11:51 PM | அ+அ அ- |

சென்னை: தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட சிறப்புப் பயிற்சி மையங்களில் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சென்னை மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்டத்தின் கீழ் இயங்கும் சிறப்புப் பயிற்சி மையங்கள் மூடப்பட்டன. அதனால், இப்பயிற்சி மையங்களில் கல்வி பயிலும் மாணவா்கள் கல்வி கற்க இயலாத சூழ்நிலை நிலவியது.
அங்குள்ள மாணவா்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, தொலைக்காட்சி மூலம் கல்வி பயிற்றுவிக்கும் பொருட்டு
பள்ளிக் கல்வித் துறையினரால் நடத்தப்படும் கல்வித் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை (காலை 11 மணி முதல் 11.30 மணி வரை) பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.