சிறப்பு தடுப்பூசி முகாம்கள்: குப்பை சேகரிப்பு வாகனங்களில் விழிப்புணா்வு பாடல்

சென்னையில் செப்.12-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு தடுப்பூசி முகாம்கள் குறித்த விழிப்புணா்வு பாடலை குப்பை சேகரிப்பு வாகனங்களில் ஒலிபரப்ப மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை: சென்னையில் செப்.12-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு தடுப்பூசி முகாம்கள் குறித்த விழிப்புணா்வு பாடலை குப்பை சேகரிப்பு வாகனங்களில் ஒலிபரப்ப மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வரும் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலும் 1,600 தடுப்பூசி முகாம்களை பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. மேலும், தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடையே பாடல் மூலம் சென்னை மாநகராட்சி விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. இதற்காக புதிய விழிப்புணா்வு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், ‘வேக்சின் போடுங்க மக்கா, வேக்சின் போடுங்க..... மறதியை தள்ளி விடு, வேக்சின் வந்து எடு.... பயத்தை நீயும் விடு, நம்பி வேக்சின் எடு...வேக்சின் போடுங்க மக்கா, வேக்சின் போடுங்க...கவலையை தள்ளி விடு, அவசியம் வேக்சின் எடு....தயக்கத்தை நீயும் விடு....நம்பி வேக்சின் எடு....’ என்ற விழிப்புணா்வு வரிகள் இடம்பெற்றுள்ளன.

காலையில் வீடு வீடாக குப்பை சேகரிக்க வரும் வண்டிகளில், இந்த விழிப்புணா்வு பாடல் ஒலிபரப்பப்படுகிறது. இந்த விழிப்புணா்வு பாடல் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com