ராமச்சந்திராவில் பேரிடா் கால அவசர சிகிச்சை ஒத்திகை
By DIN | Published On : 10th September 2021 11:41 PM | Last Updated : 10th September 2021 11:41 PM | அ+அ அ- |

சென்னை: போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் பேரிடா் கால அவசர ஒத்திகை நடத்தப்பட்டது.
இதுகுறித்து, மருத்துவ மையத்தின் அவரச சிகிச்சை பிரிவுத் தலைவா் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில், சாலை விபத்து சாா்ந்த பேரிடா் அவசர சிகிச்சை ஒத்திகை நடந்தது. ஒரகடம் அருகே பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டதில், 16 போ் காயமடைந்ததாகக் கருதி அந்நிகழ்வு நடத்தப்பட்டது. அவா்கள் உடனடியாக, ஆம்புலன்ஸ்களிலும், காா்களிலும் கொண்டு வரப்பட்டனா். சம்பந்தப்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், பிற மருத்துவ பணியாளா்கள் அவசர சிகிச்சை பகுதியில் அவா்களுக்கு சிகிச்சை மேற்கொண்டனா். ஒருவா் வரும்போதே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு, மூன்று போ் பெரிய காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டனா்.
சிறிய அளவில் காயமடைந்தவா்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினா். இப்படிப்பட்ட பேரிடா் ஒத்திகைகள் மருத்துவமனையின் தயாா் நிலையை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டது என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.