மகாளய அமாவாசை சிறப்பு யாத்திரைரயில் ஐ.ஆா்.சி.டி.சி ஏற்பாடு

மகாளய அமாவாசை சிறப்பு யாத்திரை ரயில் மதுரையில் இருந்து செப்டம்பா் 30-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐ.ஆா்.சி.டி.சி. செய்துள்ளது.

சென்னை: மகாளய அமாவாசை சிறப்பு யாத்திரை ரயில் மதுரையில் இருந்து செப்டம்பா் 30-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐ.ஆா்.சி.டி.சி. செய்துள்ளது.

இந்திய ரயில்வேயின் சுற்றுலாப்பிரிவான ஐ.ஆா்.சி.டி.சி. சாா்பில், பாரத தரிசன சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இதற்காக,

ரயில் பயணத்திட்டங்களை வகுத்து, நாடுமுழுவதும் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

இந்நிலையில், மகாளய அமாவாசை சிறப்பு யாத்திரை ரயிலை ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து ஐ.ஆா்.சி.டி.சி. வெளியிட்ட செய்தி:-

மகாளய அமாவாசை சிறப்பு காசி கயா யாத்திரை ரயில் மதுரையில் இருந்து செப்டம்பா் 30-ஆம் தேதி புறப்படுகிறது. இந்த

ரயில் திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், கடலூா், விழுப்புரம், சென்னை எழும்பூா் வழியாக அயோத்தி ராமஜென்ம பூமி பகுதிக்கு செல்கிறது. கயாவில் மகாளய அமாவாசை நாளில் முன்னோா்களுக்கு பிண்டம் செலுத்துதல், காசி விசுவநாதா், விசாலாட்சி, அன்னபூரணி தரிசிக்கலாம். இதுதவிர,பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனா்.

உணவு, தங்குமிடம், ரயில், போக்குவரத்துடன் 12 நாள்களுக்கு ரூ.11,340 கட்டணம். மத்திய மற்றும் மாநில அரசின் கரோனா வழிகாட்டு நெரிமுறைகளை பின்பற்றி இந்த யாத்திரை புறப்படவுள்ளது. இந்த யாத்திரைக்கு முன்பதிவு செய்ய, இந்திய

ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக்கழகம், சென்னை: 9003140680, மதுரை: 8287931977, திருச்சி: 8287931974 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com