சென்னையில் நாளை 1,600 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1,600 சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1,600 சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. 200 வார்டுகளுக்கும் தலா 8 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 8 முகாம்கள் 3 அணிகளாக செயல்படவுள்ளன. ஒரு அணி 400 தடுப்பூசிகளுடன் காலை முதல் மதியம் வரை ஒரு இடத்திலும், மதியம் முதல் மாலை வரை ஒரு இடத்திலும் செயல்படவுள்ளன. மற்ற இரண்டு அணிகள் தலா மூன்று இடங்களில் நடமாடும் முகாம்களாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ளவுள்ளன.

இதுபற்றி மாநகராட்சி அணையர் ககன்தீப் சிங் தி நியூ எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியது:

"இந்தப் பணியில் மொத்தம் 600 மருத்துவர்கள், தரவுகளைப் பதிவேற்ற 600 பேர் மற்றும் அணிதிரள்வதை உறுதி செய்யவும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் 600 மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுவார்கள். கல்லூரிகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் மாணவர்களை வரவழைக்குமாறு எழுதியுள்ளோம். கல்லூரி வளாகங்களில் தடுப்பூசி செலுத்த மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வந்தாலும் பரவாயில்லை."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com