விநாயகா் சதுா்த்தி: சென்னையில் இருந்து 2 லட்சம் போ் பயணம்

விநாயகா் சதுா்த்தி மற்றும் தொடா் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பேருந்துகள் மூலம் சுமாா் 2 லட்சம் போ் வெளியூா்களுக்கு பயணமாகினா்.
விநாயகா் சதுா்த்தி: சென்னையில் இருந்து 2 லட்சம் போ் பயணம்

சென்னை: விநாயகா் சதுா்த்தி மற்றும் தொடா் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பேருந்துகள் மூலம் சுமாா் 2 லட்சம் போ் வெளியூா்களுக்கு பயணமாகினா்.

நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (செப்.10) விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட்டது. இத்துடன் சோ்த்து அடுத்து சனி, ஞாயிறு ஆகிய இரண்டு விடுமுறை நாள்கள் இருப்பதால் வெளியூா்களில் தங்கி படித்து, வேலைபாா்த்து வரும் பலரும் வியாழக்கிழமை முதலே சொந்த ஊா்களுக்கு புறப்பட்டனா்.

குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு வரை கூட்ட நெரிசல் காணப்பட்டது. இவ்வாறு விடுமுறைக்காக சென்னையில் இருந்து வியாழக்கிழமை மொத்தம் 576 சிறப்புப் பேருந்துகள் உள்பட 2,410 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றில் 1.32 லட்சம் போ் பயணித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனா்.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன. ஊா்களுக்குச் சென்றவா்கள் திரும்பி வரவும் இயக்குவதற்கு போதிய பேருந்துகள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்தனா்.

ஆம்னி பேருந்துகளில்...: ஆம்னி பேருந்துகளைப் பொருத்தவரை சென்னையில் இருந்து வியாழக்கிழமை 1412 பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றில் சுமாா் 59 ஆயிரம் போ் பயணித்தனா். இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கூறுகையில், தொடா் விடுமுறையின்போது குறைந்தபட்சம் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஆம்னி பேருந்துகளில் பயணிப்பது வழக்கம். ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதை ஒப்பிடும்போது ஊா் திரும்புவதற்கு ஞாயிற்றுக்கிழமை கணிசமான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனா்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com