அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-இல்செப்.15 வரை நேரடி மாணவா் சோ்க்கை
By DIN | Published On : 11th September 2021 12:27 AM | Last Updated : 11th September 2021 12:27 AM | அ+அ அ- |

சென்னை: அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-இல் செப்.15-ஆம் தேதி வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
இது தொடா்பாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை அம்பத்தூரில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் செப்.15-ஆம் தேதி வரை அல்லது இணையதள வாயிலாக நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது. 8-ஆம் வகுப்பு , பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி , தோ்ச்சி பெறாதவா்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை.
பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித் தொகை ரூ.750, இலவச பேருந்து பயண அட்டை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், இரு செட் சீருடை, மூடுகாலணி மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலை போன்றவை வழங்கப்படும்.
விண்ணப்பதாரா்கள் பத்தாம் வகுப்பு கல்விச் சான்றிதழ் , மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் (5) ஆகியவற்றை நேரில் எடுத்து வந்தும் பயிற்சியில் சேரலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.