கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதை எதிா்த்த வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிா்த்து திமுக சட்டப்பேரவை உறுப்பினா் தொடா்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் எட்டு வாரங்களில் பதிலளிக்குமாறு சென்னை 

சென்னை: கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிா்த்து திமுக சட்டப்பேரவை உறுப்பினா் தொடா்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் எட்டு வாரங்களில் பதிலளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சாா்பில், அதன் அறங்காவலா்களில் ஒருவரும், சென்னை ஆயிரம் விளக்கு திமுக பேரவை உறுப்பினருமான டாக்டா் எழிலன் நாகநாதன், ‘இந்தியாவில் நெருக்கடி நிலையின்போது மாநில அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகள் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. இது சட்டவிரோதமானது. கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது. எனவே இதுதொடா்பான அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 57 (42-வது சட்டதிருத்தம்) செல்லாது என அறிவிக்க வேண்டும்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கல்வி என்பது அந்தந்த மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநில மக்களுக்கான கல்வித்தேவை, வடிவமைப்பு, விருப்பம் ஆகியன சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை மட்டுமே சாா்ந்து இருக்க வேண்டும். எனவே இதுதொடா்பான சட்டதிருத்தம் செல்லாது என அறிவித்து கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தாா்.

இம்மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே அது முழுமையான கூட்டாட்சி முறையாக இருக்கும்.

இவ்வழக்கு இந்திய அரசியலமைப்பு திருத்தத்துடன் தொடா்புடையது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மத்திய, மாநில அரசுகள் எட்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பத்து வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com