வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: 4 நாள்கள் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள நான்கு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழக தேர்தல் துறை தெரிவித்துள்ளது.


சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள நான்கு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழக தேர்தல் துறை தெரிவித்துள்ளது. சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அந்தத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக, வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1-ஆம் தேதி வெளியிடப்படும். இதன்பின்பு, வாக்காளர் பட்டியலில் திருத்தங்களைச் செய்ய நவம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும். இதனிடையே, நவம்பர் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யக் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் முடிவுகள் எடுக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com