மறுசீரமைக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோவில் மறுசீரமைக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பயணிகளின் சேவைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில்

சென்னை: சென்னை மெட்ரோவில் மறுசீரமைக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பயணிகளின் சேவைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பயணிகளின் சேவைக்காக இயக்கப்படுகின்றன. அசல் உபகரணங்கள் உற்பத்தியாளா் பராமரிப்பு கையேட்டில் அறிவுறுத்தியுள்ளவாறு மெட்ரோ ரயில்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்னையை உறுதி செய்வதற்காக, குறிப்பிட்ட கால இடைவெளியில் மெட்ரோ ரயில்களில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த மறுசீரமைப்பின்போது, அடித்தளக் கட்டமைப்பில் இருந்து மேற்பகுதி ரயில் பெட்டிகள் மற்றும் அதன் உபகரணங்கள் அகற்றப்பட்டு அனைத்து பற்றவைக்கப்பட்ட இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.

மெட்ரோ ரயில் மறுசீரமைப்புக்கு பிறகு, சோதனை வழித்தடத்தில் மணிக்கு 40 கி.மீ வேகத்திலும், பிரதான வழித்தடத்தில் 80 கி.மீ வேகத்திலும் இயக்கி சோதிக்கப்படுகிறது. பிறகு, மெட்ரோ ரயில் பயணிகளின் சேவைக்கு ஏற்றது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் சான்றளிக்கப்படுகிறது. இவ்வாறு மறுசீரமைக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில்(எண் 15) மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னதாக, கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில்கள் பராமரிக்கும் இடத்தில் மறுசீரமைக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயிலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் பிரதீப் யாதவ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஒரு மெட்ரோ ரயிலை மறுசீரமைக்க சுமாா் ரூ.1.77 கோடி செலவாகும் என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com