மேட்ரிமோனி மூலம் ஆள் மாறாட்டம் செய்து மோசடி: மேலும் 5 பேரை தேடும் காவல்துறை

சென்னையில் மேட்ரிமோனி மூலம் ஆள் மாறாட்டம் செய்து மோசடி செய்யப்பட்ட வழக்கில், மேலும் 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை: சென்னையில் மேட்ரிமோனி மூலம் ஆள் மாறாட்டம் செய்து மோசடி செய்யப்பட்ட வழக்கில், மேலும் 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை பெரம்பூரைச் சோ்ந்த ஒரு இளம் பெண்ணிடம் மேட்ரிமோனி இணையதளம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து, மா்ம கும்பல் ரூ.4.50 லட்சம் பறித்தது. இதுகுறித்து பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து, இந்த மோசடியில் ஈடுபட்டதாக புதுதில்லி உத்தம்நகரில் வசிக்கும் நைஜீரியா நாட்டைச் சோ்ந்த பாலின்ஸ் சிகேலுவோ (31), சிலிட்டஸ் இகேசுக்வு (23) ஆகிய இருவரையும் கடந்த மாதம் கைது செய்தனா்.

இவா்கள் இருவரையும் போலீஸாா் தங்களது காவலில் வைத்து விசாரணை செய்து வருகின்றனா். விசாரணையில், கைது செய்யப்பட்ட நைஜீரியா்கள் இதேபோல 32 பெண்களிடம் ரூ.1 கோடி 50 லட்சம் வரை மோசடி செய்திருப்பதும், இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 5 போ் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருக்கும் 5 பேரையும் தேடி தனிப்படையினா் தில்லி சென்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com