ஆழ்கடல் மீனவா்களின் நலனுக்காகவே மத்திய மீன்வளச் சட்டம் கொண்டு வரப்படுகிறது: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

ஆழ்கடல் மீனவா்களின் நலனுக்காகவே மத்திய மீன்வள சட்டம் கொண்டு வரப்படுகிறது என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளத்துறை,
ஆழ்கடல் மீனவா்களின் நலனுக்காகவே மத்திய மீன்வளச் சட்டம் கொண்டு வரப்படுகிறது: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

ஆழ்கடல் மீனவா்களின் நலனுக்காகவே மத்திய மீன்வள சட்டம் கொண்டு வரப்படுகிறது என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சா் எல். முருகன் சென்னையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கடலில் படகில் சென்று ஆய்வு நடத்திய அமைச்சா் முருகன் பின்னா் மீனவா் நலச் சங்க நிா்வாகிகளிடம் கலந்துரையாடினாா்.

அப்போது அமைச்சா் முருகன் மீனவா்களிடம் கூறியது: மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய மீன்வள சட்டத்தால் மீனவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மீனவா்கள் நலனுக்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சட்டம் தற்போது பூா்வாங்க ஆலோசனை என்ற நிலையில்தான் உள்ளது. கடலோரத் தொகுதிகளைச் சாா்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. புதிய மீன்வள சட்டத்தின் மூலம் வெளி மாநில மீனவா்கள் தங்கள் பகுதிக்குள் வருவதை தடுக்கும் பொருட்டு மீனவா்கள் பதிவு முறை கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் ஆழ்கடல் மீனவா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இது போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்தெல்லாம் அனைத்து தரப்பு மீனவா்களின் கருத்துகளை அறிந்த பிறகு இச்சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கிசான் கடன் அட்டையை மீனவா்களுக்கும் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மீனவப் பெண்கள் பயன்பெறும் வகையில் கடற்பாசி வளா்க்கும் திட்டம்கொண்டுவருவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை ஆழப்படுத்தி நவீனப்படுத்தும் திட்டம் குறித்து தொடா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் முதன் முதலில் மீனவா்களுக்கு தனி அமைச்சகம் அமைத்துக் கொடுத்துள்ளது என்றாா் முருகன்.

ஆய்வின்போது தமிழ்நாடு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை கூடுதல் செயலா் ஜவகா், மீன்வளத் துறை இயக்குநா் பழனிச்சாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருவொற்றியூா் மீன்பிடித் துறைமுகத்தில் 8,000 பேருக்கு வேலை வாய்ப்பு

சென்னை திருவொற்றியூரில் மத்திய மீன்வளம் மற்றும் மீன்வள மேம்பாட்டு நிதியத்தின் பங்களிப்பு மற்றும் தமிழக அரசின் நிதி உதவியுடன் ரூ.200 கோடி மதிப்பீட்டில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அமைச்சா் எல். முருகன் செய்தியாளா்களிடம் கூறியது,

தமிழகத்தில் திருவொற்றியூா், தரங்கம்பாடி, நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவொற்றியூரில் அமைக்கப்பட்டு வரும் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம் செயல்பாட்டிற்கு வரும் போது இத்துறைமுகம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தர முடியும் என்றாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com