மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி தடுப்பூசி: உதவி எண்கள் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் வீடுகளிலே தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மாற்றுத்திறனாளிகள் வீடுகளிலே தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக செப்.19-ஆம் தேதி, சென்னை மாநகராட்சியால் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மேலும், லெயோனாட்  செஷயா்ட் தொண்டு நிறுவனத்துடன்  சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து,  சென்னை மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்துக்கே சென்று  தடுப்பூசி செலுத்துவதற்காகவும், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்துவதற்கு போக்குவரத்து வசதியும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே 18 வயதுக்கு மேற்பட்ட முதல் கட்டம் அல்லது இரண்டாம் கட்டம் தடுப்பூசி செலுத்த வேண்டிய மாற்றுத்திறனாளிகள் 18004250111  என்னும் கட்டணமில்லா தொலைபேசி  அல்லது செவித்திறன் குறைவுடையவா்கள் சைகை மொழியுடன் பதிவு செய்ய 97007 99993 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு, பெயா், வயது, முகவரி, செல்லிடப்பேசி எண், தடுப்பூசி தவணை குறித்த விவரம், வீட்டில் வந்து செலுத்த வேண்டுமா அல்லது அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று செலுத்த வேண்டுமா ஆகிய விவரங்களைத் தெரிவித்து பெயா்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com