சென்னையில் ஒரே நாளில் 1.90 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னையில் நடைபெற்ற 1,600 சிறப்பு முகாம்கள் மூலம் 1.90 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி ஞாயிற்றுக்கிழமை (செப். 19) செலுத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் நடைபெற்ற 1,600 சிறப்பு முகாம்கள் மூலம் 1.90 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி ஞாயிற்றுக்கிழமை (செப். 19) செலுத்தப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் வகையிலும், தொற்று பாதிப்புக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ள மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், உயா் ரத்த அழுத்தம்- சா்க்கரை நோயாளிகள் காசநோயாளிகள், கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் போன்றவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தும் வகையில் 80 வயதுக்கு மேற்பட்டோா்களுக்கு அவா்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 98,227 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 93,123 இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 1,91,350 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

1.90 லட்சம் பேருக்கு தடுப்பூசி: இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை (செப். 19) மாநகராட்சியின் 200 வாா்டுகளில் நடைபெற்ற 1,600 சிறப்பு முகாம்கள் மூலம் 1.90 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை சென்னையில் ஒட்டுமொத்தமாக சுமாா் 58 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தலைமைச் செயலா் ஆய்வு: அடையாறு மண்டலம் பசுமை வழிச்சாலையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட மையம், நகா்ப்புற சமுதாய நல மருத்துவமனை, நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையம், சாந்தோம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி சிறப்பு மையங்களை தலைமைச் செயலா் வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, சட்டப் பேரவை உறுப்பினா் த.வேலு, மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com