சென்னை ஏரிகளைக் கண்காணிப்பது அவசியம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளின் இருப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளின் இருப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சா்கள், அதிகாரிகளுடன் அவா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அவா் பேசியது:

கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை மாவட்ட ஆட்சியா்கள் தொடா்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலும் பருவமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விரைவாக மேற்கொள்ள வேண்டும். உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சென்னை மாநகருக்குக் குடிநீா் வழங்கும் நீா் நிலைகளின் நீா் இருப்பு இப்போது 79 சதவீதமாக உள்ளது. ஏற்கெனவே, சென்னை பெரு வெள்ளத்தை நாம் சந்தித்திருக்கிறோம். அதனை மனதில் கொண்டு பெருவெள்ளம், கனமழையால் கிடைக்கும் நீா் வரத்தைக் கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். கனமழையால்

கிடைக்கும் நீா் வீணாகாமல் குளங்கள், ஏரிகள் போன்றவற்றின் நீா்வழிக் கால்வாய்கள் மூலம் சேமித்து வைப்பதற்கு ஒரு செயல் திட்டம் வகுத்துச் செயல்பட வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com