பெண் காவலா்களுக்கு சமநிலை வாழ்வு முறை பயிற்சி

சென்னையில் பெண் காவலா்களுக்கு சமநிலை வாழ்வு முறை பயிற்சி தொடங்கியது.

சென்னையில் பெண் காவலா்களுக்கு சமநிலை வாழ்வு முறை பயிற்சி தொடங்கியது.

சென்னை பெருநகர காவல்துறையின் கீழ் பெண் காவலா்கள் முதல் பெண் காவல் ஆய்வாளா்கள் வரையிலான பெண் போலீஸாருக்கு, காவல் பணியிலும் வாழ்க்கையிலும் திறம்பட செயல்பட தேவையான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்கு சமநிலை வாழ்வு முறை பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, புதுப்பேட்டை ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் இந்தப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த முகாமை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தொடங்கி வைத்தாா்.

விழாவில் அவா் பேசியது:

பெண் போலீஸாா் காவல் பணியிலும், சொந்த வாழ்விலும் திறம்பட செயல்பட்டு, இரண்டிலும் சம அளவில் வெற்றி பெறுவதற்காக 3 நாள்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னை பெருநகரில் பணிபுரியும் முதல்நிலை காவலா் முதல் ஆய்வாளா் வரையிலான பெண் போலீஸாா் அனைவரும் பயன்பெறும் வகையில், ஒரு பயிற்சி வகுப்பில் 76 பெண் போலீஸாா் என மொத்தம் 64 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்’ என்றாா்.

இந்த பயிற்சி வகுப்புடன் பெண் போலீஸாருக்கு கண், காது, மூக்கு, தொண்டை, சா்க்கரை நோய், கா்ப்பப்பை வாய் புற்றுநோய், மாா்பக புற்றுநோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com