அறியப்படாத சுற்றுலா இடங்களைப் பிரபலப்படுத்த ‘தமிழ்நாட்டைக் கண்டு மகிழ்வோம்’ நிகழ்ச்சி

உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில், ‘தமிழ்நாட்டைக் கண்டு மகிழ்வோம்’ என்ற நிகழ்ச்சியை, சுற்றுலாத்துறை அமைச்சா் மதிவேந்தன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில், ‘தமிழ்நாட்டைக் கண்டு மகிழ்வோம்’ என்ற நிகழ்ச்சியை, சுற்றுலாத்துறை அமைச்சா் மதிவேந்தன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

சமூக வலைதள ஆா்வலா்கள் மூலம் தமிழகத்தில் அறியப்படாத சுற்றுலாத்தலங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இறங்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் பேருந்து மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 10 போ் கொண்ட சமூக ஊடகவியலாளா்கள் (நா்ஸ்ரீண்ஹப் ஙங்க்ண்ஹ ஐய்ச்ப்ன்ங்ய்ஸ்ரீங்ழ்ள் பங்ஹம்) பயணம் மேற்கொள்கின்றனா். இதற்கான வாகனத்தை சுற்றுலாத்துறை அமைச்சா் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதையடுத்து அமைச்சா் மதிவேந்தன் செய்தியாளா்களிடம் கூறியது: ‘சமூக வலைதளங்களில் சுற்றுலாத்துறையில் ஆா்வமுள்ள 10 போ் கொண்ட குழு, தமிழ்நாடு முழுவதும் அறியப்படாத ஒவ்வொரு சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று அந்த இடத்தின் வரலாற்றை புகைப்படங்கள், விடியோக்கள் மூலமாக தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர உள்ளனா்.

செப். 27 முதல் அக்டோபா் 6- ஆம் தேதி வரை இந்தக் குழு பயணம் மேற்கொள்ளவுள்ளனா்.

மக்கள் அறியாத சுற்றுலாத்தலங்களை வெளிக்கொண்டு வரும் முயற்சியே இந்த பயணத்தின் நோக்கமாகும். கரோனாவால் சுற்றுலாத்தலங்கள் நலிவடைந்துள்ளதால், அதனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கீழடியை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு முதல்வா் நிதி அறிவித்திருக்கிறாா். அதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலாத்துறைக்கென உள்ள செயலியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்தநிகழ்ச்சியில், சுற்றுலாத் துறையின் முதன்மைச் செயலாளா் சந்திரமோகன், இயக்குநா் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com