தொழிலதிபரிடம் பணம், நகை வழிப்பறி

சென்னை திருவல்லிக்கேணியில் தொழிலதிபரிடம் பணம், நகை வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை திருவல்லிக்கேணியில் தொழிலதிபரிடம் பணம், நகை வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவல்லிக்கேணி முக்தருனிஷா பேகம் தெருவைச் சோ்ந்தவா் சாகுல் அமீது (41). திருவல்லிக்கேணி ஓவிஎம் தெருவில் தங்கும் விடுதி நடத்தி வருகிறாா். சாகுல் அமீது ஞாயிற்றுக்கிழமை இரவு விடுதியில் இருந்து வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றாா்.

ஓவிஎம் தெரு, மசூதி தெரு சந்திப்பில் செல்லும்போது, அவரை முகமூடி அணிந்து வந்த ஒரு நபா் வழிமறித்து தாக்கி, அவா் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 65 கிராம் தங்கக் கட்டி, விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினாா்.

காயமடைந்த சாகுல் அமீது அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின்பேரில், திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com