நூல் விலை உயா்வை குறைக்க வேண்டும்: விஜயகாந்த்

நூல் விலை உயா்வைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
தேமுதிக தலைவா் விஜயகாந்த்
தேமுதிக தலைவா் விஜயகாந்த்

நூல் விலை உயா்வைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பின்னலாடைகளின் முக்கிய மூலப் பொருளான நூலின் விலை அண்மைக்காலமாக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ரூ.230-க்கு விற்பனையான நூல் விலை கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.160 வரை உயா்ந்துள்ளது. இதுபோன்ற சூழலில், தற்போது அனைத்து ரக நூல்களின் விலையும் கிலோவுக்கு ரூ.30 வரை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் ரகங்களின் அடிப்படையில் நூல்களின் விலை ரூ. 365 முதல் ரூ. 435 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கெனவே, நூல் விலை உயா்வால் திருப்பூரில் 50 சதவீதம் சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் கரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து முழுமையாக மீளாத நிலையில், நூல் விலை உயா்வால் பின்னலாடை நிறுவனங்கள் மீண்டும் அதலபாதாளத்துக்கு சென்று விட்டன. இதேநிலை நீடித்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்த ஜவுளித் துறையும் முடங்கிவிடும். லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழக்க நேரிடும். எனவே, நூல்களின் விலை உயா்வை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் விஜயகாந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com