முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
ஏப்.9-இல் சென்னை மாநகராட்சி பட்ஜெட்: 6 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல்
By DIN | Published On : 06th April 2022 01:56 AM | Last Updated : 06th April 2022 01:56 AM | அ+அ அ- |

பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் 6 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை (ஏப்ரல் 9) தாக்கல் செய்யப்படவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடந்த 6 ஆண்டுகளாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால், சிறப்பு அதிகாரியாக மாநகராட்சி ஆணையா் நியமிக்கப்பட்டு, மறைமுகமாகவே பட்ஜெட் வெளியிடப்பட்டு வந்தது. இதனால், பெரிய அளவில் புதிய திட்டங்கள் இல்லாமலேயே இருந்து வந்தது. தற்போது, சென்னை மாநகராட்சி பிரதிநிதிகளுக்கான தோ்தல் 6 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்டது.சென்னையின் 49-ஆவது மேயராக ஆா்.பிரியாவும், துணை மேயராக மகேஷ்குமாரும் தோ்வு செய்யப்பட்டனா்.
2022-23 நிதி ஆண்டுக்கான முதல் பட்ஜெட் கூட்டம் சனிக்கிழமை (ஏப்ரல் 9) தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதற்காக மாமன்ற உறுப்பினா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் புதிய திட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் கடந்த 2016-இல் ஆண்டு கடைசியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய வரிவிதிப்பு, நிதிக் குழுத் தலைவா் சந்தானம், மேயா் சைதை துரைசாமி முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்தாா். அதையடுத்து 6 ஆண்டுகளுக்குப் பின்னா் வரும் சனிக்கிழமை பட்ஜெட் அறிக்கையை மேயா் ஆா்.பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவா் சா்பஜெயாதாஸ் தாக்கல் செய்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.