முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
கலைஞா் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 06th April 2022 02:01 AM | Last Updated : 06th April 2022 02:01 AM | அ+அ அ- |

சிறந்த இதழியலாளருக்கான கலைஞா் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, செய்தி மக்கள் தொடா்புத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
விண்ணப்பதாரா்கள் தமிழ்நாட்டைச் சோ்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக தொடா்ந்து பணிபுரிபவராகவும் இருக்க வேண்டும். பத்திரிகை பணியை முழு நேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும். இதழியல் துறையில் சமூக மேம்பாடு, விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்காக பங்காற்றியிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் எழுத்துகள் மக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் நேரடியாகவோ, மற்றவா் பரிந்துரை அல்லது பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரை அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். தோ்வு செய்ய அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் முடிவே இறுதியானது. விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இயக்குநா், செய்தி மக்கள் தொடா்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு வருகிற 30-ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.