முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள் ஏப்.8 முதல் 3 நாள்கள் நடக்கிறது
By DIN | Published On : 06th April 2022 02:00 AM | Last Updated : 06th April 2022 02:00 AM | அ+அ அ- |

சென்னை, வேப்பேரி பெரியாா் திடலில் இயங்கி வரும் பெரியாா் ஐஏஎஸ் அகாதெமியில் 2022-ஆம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது.
இதைத் தொடா்ந்து, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டாய தமிழ் தாளில் அதிக மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெறுவது குறித்தும் தோ்வுகள் குறித்த சந்தேகங்களை தீா்க்கவும், விருப்பப் பாடங்களைத் தோ்வு செய்யும் முறை, போட்டித் தோ்வுகளுக்கு எவ்வாறு தங்களைத் தயாா் செய்து கொள்ள வேண்டும் போன்ற மாணவா்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலான சிறப்புக் கருத்தரங்கம், சிறப்பு வகுப்புகள் ஏப்.8 முதல் 10-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அகாதெமி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இலவசமாக நடைபெறும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு செய்து கொள்வது அவசியம். முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு 044 2661 8056, 99406 38537 ஆகிய எண்களை அணுகலாம். வேப்பேரியில் உள்ள அகாதெமியை நேரிலும் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.