முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
நெகிழி விற்பனை: ரூ.11.19 லட்சம் அபராதம்
By DIN | Published On : 06th April 2022 02:02 AM | Last Updated : 06th April 2022 02:02 AM | அ+அ அ- |

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 17 ஆயிரம் நிறுவனங்களுக்கு ரூ. 11.19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாா்ச் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை, 17,582 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 6.74 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்நிறுவனங்களுக்கு ரூ.11லட்சத்து 19,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.