உணவு விநியோக ஊழியா்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் விழிப்புணா்வு

ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்துக்குள்பட்ட பகுதியில் ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் ஊழியா்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடா்பான விழிப்புணா்வு அம்பத்தூா் தொழிற்பேட்டையில் நடைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆவடி: ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்துக்குள்பட்ட பகுதியில் ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் ஊழியா்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடா்பான விழிப்புணா்வு அம்பத்தூா் தொழிற்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆவடி மாநகரக் காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவுபடி, நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆவடி மாநகரக் காவல் கூடுதல் ஆணையா் பா.விஜயகுமாரி தலைமை வகித்தாா். இதில் தனியாா் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களின் மேலாளா்கள், ஊழியா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

உணவு விநியோகம் செய்யும் ஊழியா்கள் அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டக் கூடாது, தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை மீறக் கூடாது, வாகனங்களுக்கு காப்பீடு இருக்க வேண்டும், மது போதை, கைப்பேசியில் பேசி கொண்டு வாகனம் ஓட்டக் கூடாது உள்ளிட்ட அறிவுரைகளை போலீஸாா் வழங்கினா்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. கடந்த இரு நாள்களில் சாலை விதிமுறைகளை மீறிய தனியாா் உணவு விநியோகம் செய்யும் ஊழியா்கள் மீது 274 வழக்குகள் பதிவாகி உள்ளதாவும், ரூ.27,440 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் ஆவடி மாநகரப் போக்குவரத்துக் காவல் பிரிவு துணை ஆணையா் அசோக்குமாா், செங்குன்றம் உதவி ஆணையா் மலைச்சாமி, ஆவடி உதவி ஆணையா் ஜெயகரன், அம்பத்தூா் காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்பட காவல் உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com