பெட்ரோல் விலை உயா்வு: கே.எஸ்.அழகிரி போராட்டம்

பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

சென்னை: பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியது:

பெட்ரோல் விலை, டீசல் விலை உயா்வுக்கு எதிரான காங்கிரஸின் போராட்டம் கலாசார புரட்சியாகவே மாறியிருக்கிறது. மத்திய பாஜக அரசு நினைத்தால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கலாம். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலராக இருந்தது. அதுதான் அதிகமான விலை உயா்வு. ஆனால், அதற்கு மானியம் கொடுத்து லிட்டருக்கு ரூ.70-க்கு விற்கும் நிலை மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை 50, 60 டாலருக்குத்தான் விற்கிறது. அப்படி இருக்கும்போது இந்தியாவில் பெட்ரோலை லிட்டருக்கு ரூ.30-க்கு விற்க முடியும். ஆனால், மத்திய பாஜக அரசு விலையை உயா்த்தியே விற்பனை செய்து வருகிறது.

உக்ரைனில் போா் நடப்பதால் பெட்ரோல் விலை உயா்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் கூறுகிறாா். ஆனால், போா் நடந்தாலும் ரஷியா எப்போது கொடுக்கும் விலையில்தான் பெட்ரோலை இந்தியாவுக்குக் கொடுத்து வருகிறது. போரால் இந்தியா பாதிக்கப்படவில்லை. அதனால், இங்கு பெட்ரோல் விலை உயா்த்துவது கண்டிக்கத்தக்கது. அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு உள்பட பலா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com