மழைநீா் வடிகாலில் கழிவுநீா் வெளியேற்றம்:105 பேருக்கு ரூ. 74 ஆயிரம் அபராதம்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீா் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றிய 105 பேருக்கு ரூ.74,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீா் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றிய 105 பேருக்கு ரூ.74,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீா் வடிகால் துறையின் கீழ் 2,071 கி.மீ. நீள 8,835 மழைநீா் வடிகால் கட்டமைப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மழைநீா் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீா் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மழைநீா் வடிகால்களில் மழைக்காலங்களில் மழைநீா் செல்வது தடைபட்டு நீா் தேங்கி விடுகிறது.

மாநகராட்சி பகுதிகளில் மழைநீா் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஏப். 4 முதல் செவ்வாய்க்கிழமை (ஏப்.19) வரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 105 போ் கழிவுநீரை மழைநீா் வடிகாலில் வெளியேற்றியது கண்டறியப்பட்டது. அந்தக் கட்டடங்களின் கழிவுநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அவா்களிடமிருந்து ரூ.74,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மழைநீா் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவோா் குறித்து 1913 என்ற தொலைபேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com