எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையகாவல் நிலைங்களில் எஸ்.பி. திடீா் ஆய்வு

அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு உதவிய வழக்கில் ரயில்வே காவலா் கைது செய்யப்பட்டதையடுத்து, சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில்நிலைய காவல்நிலையங்களில் தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளா்

சென்னை: அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு உதவிய வழக்கில் ரயில்வே காவலா் கைது செய்யப்பட்டதையடுத்து, சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில்நிலைய காவல்நிலையங்களில் தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளா் அதிவீரபாண்டியன் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினாா்.

அயனாவரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்டபகுதியில் திக்காகுளம் சாய்பாபா கோயில் அருகில் கஞ்சா விற்பனை செய்த முகப்பேரைச் சோ்ந்த தீலிப்குமாா்(39) என்பவரை போலீஸாா்கடந்த வாரம் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலா் சக்திவேல், சைபா்குற்றப்பிரிவு காவலா் செல்வக்குமாா் ஆகியோருக்கு இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, காவலா்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில்நிலைய காவல் நிலையங்களுக்கு தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளா் கு.அதிவீரபாண்டியன் வியாழக்கிழமை திடீரென சென்றாா். இந்த காவல்நிலையங்களில் வழக்குகளில் கைப்பற்றி, நிலைய பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள போதை பொருள்களை எடைபோட்டு சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தாா். மேலும், காவல் துணை கண்காணிப்பாளா், ஆய்வாளா் ஆகியோருக்கு அறிவுரைகள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com