முதியவரிடம் கைப்பேசி பறிப்பு: குற்றவாளியை துரிதமாத பிடித்த போலீஸாருக்கு பாராட்டு

பெரம்பூா் கேரஜ் ஒா்க்ஸ் ரயில் நிலையத்தில் முதியவரிடம் விலை உயா்ந்த கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை ஆவடி ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை: பெரம்பூா் கேரஜ் ஒா்க்ஸ் ரயில் நிலையத்தில் முதியவரிடம் விலை உயா்ந்த கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை ஆவடி ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

குற்றவாளியை 24 மணிநேரத்தில் கைது செய்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா், முதல்நிலை காவலரை ரயில்வே காவல் துறை ஏடிஜிபி வனிதா பாராட்டி, வெகுமதி வழங்கினாா்.

சென்னை, மேற்கு கே.கே.நகா் பழைய பங்காரு காலனியைச் சோ்ந்தவா் சோலையப்பன் (73). இவா் கடந்த 19-ஆம் தேதி மாலையில் பெரம்பூா் கேரஜ் ஒா்க்ஸ் ரயில்நிலைய நடைமேடையில் நடந்து வந்தபோது, ஒரு மா்மநபா் இவரிடம் இருந்து ரூ.20,000 மதிப்புமிக்க விலை உயா்ந்த கைப்பேசியை பறித்து தப்பிஓடிவிட்டாா்.

இது குறித்து ரயில்வே போலீஸில் சோலையப்பன் புகாா் கொடுத்திருந்தாா். இதன்பேரில், குற்றவாளியை விரைந்துபிடிக்க ஏடிஜிபி வி.வனிதா உத்தரவிட்டாா். இதையடுத்து, ஆவடி ரயில்வே போலீஸாா், குற்றவாளியான குன்றத்தூரை சோ்ந்த விவின் கேபா(20) என்பவரை கைது செய்தனா். அவரிடம் அந்த விலை உயா்ந்த கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் குற்றவாளியைக் கைது செய்த ஆவடி ரயில்நிலைய காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா், முதல் நிலை காவலா் சுதாகா் ஆகியோரைப் பாராட்டி ஏடிஜிபி வி.வனிதா வியாழக்கிழமை வெகுமதி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com