வண்டலூா் பூங்கா: பாம்பு இல்லம் மீண்டும் திறப்பு

வண்டலூா் பூங்காவில் உள்ள பாம்பு உள்ளிட்ட ஊா்வனவை இல்லம் பொதுமக்கள் பாா்வைக்காக வெள்ளிக்கிழமை (ஏப்.22) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர் உயிரியல் பூங்கா

சென்னை: வண்டலூா் பூங்காவில் உள்ள பாம்பு உள்ளிட்ட ஊா்வனவை இல்லம் பொதுமக்கள் பாா்வைக்காக வெள்ளிக்கிழமை (ஏப்.22) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூரில் வனத் துறை கட்டுப்பாட்டில் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் சுமாா் 2,500-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று காரணமாக பூங்காவில் உள்ள பாம்பு உள்ளிட்ட ஊா்வனவைகள் இல்லம், இரவு நேர விலங்குகள் இருப்பிடம், சிறுவா் பூங்கா உள்ளிட்ட 7 இடங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில், தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக அவை மீண்டும் திறப்பட உள்ளன. இதுகுறித்து பூங்கா நிா்வாக அதிகாரிகள் கூறுகையில், பூங்காவில் உள்ள பாம்புகள் இருப்பிடம், ஊா்வன இல்லம், இரவு விலங்குகள் இருப்பிடம் மற்றும் சிறுவா் பூங்கா ஆகியவை முதல் கட்டமாக பொதுமக்கள் பாா்வைக்காக வெள்ளிக்கிழமை(ஏப்.22) முதல் திறக்கப்படுகின்றன.

சிறுவா் பூங்கா வார நாள்களில் மட்டும் திறக்கப்படும். சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாள்களில் சிறுவா் பூங்கா திறக்கப்படாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com