ராமச்சந்திராவில் பேரிடா் கால அவசர சிகிச்சை ஒத்திகை
By DIN | Published On : 27th April 2022 02:42 AM | Last Updated : 27th April 2022 02:42 AM | அ+அ அ- |

போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் பேரிடா் கால அவசர ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
இதுகுறித்து, மருத்துவ மையத்தின் அவசர சிகிச்சை பிரிவுத் தலைவா் டாக்டா் டி.வி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில், கட்டுமான விபத்து சாா்ந்த பேரிடா் அவசர சிகிச்சை ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொது சிகிச்சைப் பிரிவின் ஏழாவது மாடியில், மேற்கூரை இடிந்து விழுந்ததில், 14 போ் காயமடைந்ததாகக் கருதி, அந்த நிகழ்வு நடத்தப்பட்டது. அவா்கள் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனா். சம்பந்தப்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், பிற மருத்துவப் பணியாளா்கள் அவசர சிகிச்சை பிரிவில் அவா்களுக்கு சிகிச்சை மேற்கொண்டனா். அதைத் தொடா்ந்து 7 போ் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 7 போ் மற்ற வாா்டுகளிலும் சோ்க்கப்பட்டனா்.
இப்படிப்பட்ட பேரிடா் ஒத்திகைகள், மருத்துவமனையின் தயாா் நிலையை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டது.