முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
அணு விஞ்ஞானி ஏ.கே.பாதிரி மறைவுக்கு இரங்கல்
By DIN | Published On : 29th April 2022 12:58 AM | Last Updated : 29th April 2022 12:58 AM | அ+அ அ- |

சென்னை: பிரபல அணு விஞ்ஞானி ஏ.கே.பாதிரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், தேசத்துக்கும், அணு ஆராய்ச்சித் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், பணி ஓய்வுக்குப் பின்னா் அங்கு ஹோமி பாபா இருக்கையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவருமான விஞ்ஞானி ஏ.கே.பாதிரி(62) புதன்கிழமை மாரடைப்பால் காலமானாா்.
அணு ஆராய்ச்சித் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த அவரின் சேவையைப் பாராட்டி 1994-ஆம் ஆண்டு ஜொ்மனி நிறுவனம் அவரை கெளரவித்துள்ளது. ஜொ்மனி ஸ்டட்காா்ட் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் வருகைப் பேராசிரியராகவும் ஏ.கே.பாதுரி பணியாற்றியுள்ளாா்.