நம்மாழ்வாா் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வாா் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வேளாண்மை கல்லூரிகளில்  ஆராய்ச்சி மையங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வேளாண்மை கல்லூரிகளில் ஆராய்ச்சி மையங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வாா் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வழியாக வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் புதிய தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூா் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வாா் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

மேலும், கரூா், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூா், சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு ஆகிய மூன்று இடங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை முதல்வா் தொடக்கி வைத்தாா்.

புதிய படிப்புகள் அறிமுகம்: வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் வேளாண்மை மற்றும் இளம் அறிவியல் தோட்டக்கலை ஆகிய பட்டப்படிப்புகளில் நிகழ் கல்வியாண்டு முதல் தமிழ்வழிக் கல்வி பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் குமுளூரில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வேளாண் பொறியியல் பட்டயப் படிப்பு ஆகியன அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினாா். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சு.முத்துசாமி, கே.ஆா்.பெரியகருப்பன், வி.செந்தில்பாலாஜி, ஆா்.காந்தி, சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com