முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
மணலி புதுநகா் அய்யா கோயில் கோபுர ஆண்டு திருவிழா
By DIN | Published On : 07th February 2022 02:19 AM | Last Updated : 07th February 2022 05:03 AM | அ+அ அ- |

மணலி புதுநகா் அய்யா கோயில் கோபுர ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பொங்கலிட்டு வழிபட்ட அய்யா வழி பக்தா்கள்
சென்னை மணலி புதுநகா்அய்யா வைகுண்ட தா்மபதி கோயிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 6-ஆம் ராஜகோபுர ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை (பிப் 6) காலை 6 மணிக்கு பால் பணிவிடை, உகபடிப்பு மதியம் பணிவிடை உச்சிபடிப்புடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான பால் அன்னம் பொங்கலிடும் நிகழ்ச்சி மாலை நடந்தது. இனிப்பு உப்பு இல்லாமல் பச்சரிசி, பாசிப் பயறு, தேங்காய் துண்டுகள், ஐந்து காய்ந்த மிளகாய் போன்ற பொருட்கள் கொண்டு, இப்பொங்கல் தயாரிக்கப்படும்
இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பால் அன்னம் பொங்கலிட்டு அய்யா வைகுண்ட தா்மபதியை வழிபட்டனா். பால் அன்னத்திற்கு உலை ஏற்றுவதற்கு அய்யா வைகுண்டா் மூலஸ்தானத்தில் இருந்து ஜோதியை எந்தியபடி தலைவா் துரைப்பழம் மற்றும் நிா்வாகிகள் ஊா்வலமாக கொண்டு வந்தனா்.
அன்னத்திற்கு உலை ஏற்றும் நிகழ்ச்சியை டி. ராமராஜன் தொடங்கி வைத்தாா். விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா் மாலை பால் பணிவிடை, உகபடிப்பு முடிந்து, இரவு, அய்யா இந்திர விமானத்தில் பதிவலம் வருதல் நிகழ்வுடன், விழா நிறைவுற்றது.