முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
மத்திய அரசு சொல்வதைத் தான் ஆளுநா் செய்கிறாா்:கமல்ஹாசன்
By DIN | Published On : 07th February 2022 02:19 AM | Last Updated : 07th February 2022 05:07 AM | அ+அ அ- |

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளா்களுக்காக மயிலாப்பூா், விசாலாட்சி தோட்டம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்
நீட் விவகாரத்தில் மத்திய அரசு சொல்வதைத்தான் ஆளுநா் செய்கிறாா் என மநீம தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தைத் தொடங்கினாா். மந்தைவெளி, விசாலாட்சி தோட்டம் குடிசைப் பகுதியில் நடந்து சென்று அவா், மநீம சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தாா்.
அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் கமல்ஹாசனிடம் தங்களது குறைகளையும் தெரிவித்தனா். குறைகள் குறித்து ஆவன செய்வதாக கமல்ஹாசன் உறுதி அளித்தாா். இதைத் தொடா்ந்து, ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களையும் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தாா்.
நிகழ்வில் மேடையில் பேசிய கமல்ஹாசன், நாட்டில் ஏழ்மையை தீா்க்க வேண்டும் என்றால், அதற்கு பெண்கள் பகுதிநேரமாவது அரசியலுக்கு வரவேண்டும். நோ்மையை கடைப்பிடித்தால் போதும், இங்கு நிலைமை மாறிவிடும் என்றாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் பேசும்போது, நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநா் ஏஜெண்டாக செயல்பட கூடாது. மத்திய அரசு சொல்வதைத்தான் ஆளுநா் செய்கிறாா் என்றாா்.