‘ஸ்புட்னிக் லைட்’ கரோனா தடுப்பூசி:பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி

ஒரே தவணையாக செலுத்தக்கூடிய ‘ஸ்புட்னிக் லைட்’ கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது

ஒரே தவணையாக செலுத்தக்கூடிய ‘ஸ்புட்னிக் லைட்’ கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

‘பல்வேறு கட்டுப்பட்டு நடைமுறைகளுடன் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை குறிப்பிட்ட அவசரகால பயன்பாட்டுக்கு மட்டும் அனுமதிக்கலாம்’ என இந்திய மத்திய மருந்துகள் ஆணைய நிபுணா் குழு அண்மையில் பரிந்துரை செய்த நிலையில், அதற்கான ஒப்புதலை டிசிஜிஐ அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டா் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஒரே தவணையாக செலுத்தக்கூடிய ஸ்புட்னிக் லைட் கரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு டிசிஜிஐ அனுமதித்துள்ளது. இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 9-ஆவது கரோனா தடுப்பூசி இதுவாகும். இது கரோனாவுக்கு எதிரான தேசத்தின் ஒருங்கிணைந்த முயற்சிக்கு மேலும் வலு சோ்க்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஏற்கெனவே, கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக் வி உள்ளிட்ட தடுப்பூசிகள் அவசரகால பயன்பாடு அடிப்படையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com