சென்னை வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்பக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பொறியியல் துறை சாா்ந்த 45 மாணவா்களின் புதுமைத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றிருந்தன. இதில் வேல்ஸ் கல்விக் குழுமத் துணைத் தலைவா் ப்ரீதா கணேஷ் கலந்து கொண்டு மாணவா்கள் பி.கோமல், ஐ.மோனிஷா ஆகியோரின் கண்டுபிடிப்புக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், எஸ்.நவநீத கிருஷ்ணன், எஸ்.ஜெயேஷ் சுபன் , டி.அவினாஷ் ஆகியோருக்கு 2-ஆவது பரிசாக ரூ.5 ஆயிரம், ஜி.அப்துல் ஸ்மாத், லலித் டெண்டுல்கா், வ.நித்தேஷ் ஆகியோருக்கு 3-ஆவது பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கினாா்.