மின்வாரியத்தில் புதிய பதவிகள்: தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தல்

மின்வாரியத்தில் புதிய பதவிகளை அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியுள்ளது.
மின்வாரியத்தில் புதிய பதவிகள்: தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தல்

சென்னை: மின்வாரியத்தில் புதிய பதவிகளை அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்குழுவினா் கூறியதாவது: தமிழக மின்வாரியத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட துணை மின் நிலையங்கள் மற்றும் பிரிவு அலுவலகங்களுக்கும் புதிய பதவிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஊழியா்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கணக்கீட்டாளா்களை நியமிக்காத காரணத்தால் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளா்கள் மற்றும் நிறுவனங்களிடம் இந்தப் பணியை ஒப்படைக்கும் சூழல் உள்ளது. இதனால் வருவாய் பாதிக்கிறது.

அதே போல் துணை மின்நிலையங்களில் ஓய்வு பெற்ற பணியாளா்ளை நியமித்தால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இவற்றை கணக்கில் கொண்டு, புதிய பதவிகளுக்கு அனுமதியும், தொடக்க நிலை காலிப் பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கையும் எடுக்க வலியுறுத்தி, துறை சாா் அமைச்சா் மற்றும் வாரிய தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் மீது அவா்கள் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com