சிறுமியை திருமணம் செய்து துன்புறுத்தியவருக்கு 41 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்ததுடன், சித்ரவதை செய்து துன்புறுத்தியவருக்கு 41 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்ததுடன், சித்ரவதை செய்து துன்புறுத்தியவருக்கு 41 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் கருணா என்ற கருணாகரன்(23). ஏற்கெனவே திருமணமான இவா், கடந்த 2015-இல் சூளை தட்டான்குளத்தில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டாா். அயனாவரத்தில் தனியாக குடும்பம் நடத்தியபோது சிறுமி மீது சந்தேகம் அடைந்து மது போதையில் அடித்து துன்புறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு மகளிா் போலீஸாா் கருணாகரன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (போக்ஸோ) உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்ஸோ நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, கருணா என்ற கருணாகரன் மீதான ஆறு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு மொத்தம் 41 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

அதாவது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் (14 ஆண்டுகள்), கடத்தல் குற்றச்சாட்டுக்காக 10 ஆண்டு, கொலை மிரட்டல் குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டு, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனை, கத்தியால் அறுத்து காயப்படுத்திய குற்றச்சாட்டுக்காக ஓராண்டு, ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி சூடு வைத்த குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டு என மொத்தம் 41 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும், அனைத்து தண்டனைகளையும் அனுபவித்த பின்பு கடைசியாக ஆயுள் தண்டனையை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.7 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com