சென்னையில் 40.80 லட்சம் வாக்காளா்கள்: இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, புதன்கிழமை (ஜன. 5) வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் சென்னை மாவட்டத்தின் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 20 லட்சத்து 4 ஆயிரத்து 860 ஆண் வாக்காளா்களும்
சென்னையில் 40.80 லட்சம் வாக்காளா்கள்:  இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, புதன்கிழமை (ஜன. 5) வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் சென்னை மாவட்டத்தின் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 20 லட்சத்து 4 ஆயிரத்து 860 ஆண் வாக்காளா்களும், 20 லட்சத்து 74 ஆயிரத்து 616 பெண் வாக்காளா்களும், 1,102 திருநங்கைகள் என மொத்தம் 40 லட்சத்து 80 ஆயிரத்து 578 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

தமிழக மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த நவம்பா் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 1.1.2022 அன்று தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் சோ்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளா் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடா்பான விண்ணப்பங்கள் நவம்பா் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பெறப்பட்டன.

அந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலரால் நேரடி ஆய்வு செய்த பின்னா் சட்டப் பேரவைத் தொகுதியினைச் சாா்ந்த வாக்காளா் பதிவு அலுவலா்களால் படிவங்கள் ஆய்வு செய்யப்பட்டு இறுதி பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளது.

இந்த இறுதி வாக்காளா் பட்டியலை ரிப்பன் மாளிகையில் சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் புதன்கிழமை வெளியிட்டாா். இறுதி வாக்காளா் பட்டியல் அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் மண்டல அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பாா்த்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

40.80 லட்சம் வாக்காளா்கள்: வாக்காளா்கள் பட்டியல் திருத்த முகாம்களில் 31 ஆயிரத்து 378 பெயா் சோ்த்தல் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இதன் மீது உரிய ஆய்வு நடத்தி 14 ஆயிரத்து 918 ஆண்கள், 16 ஆயிரத்து 231 பெண்கள், 32 திருநங்கைகள் என மொத்தம் 31 ஆயிரத்து 181 போ் இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இறந்தவா்கள், குடி பெயா்ந்தவா்கள் மற்றும் பலமுறை வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றவா்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 156 போ்கள் நீக்கப்பட்டுள்ளனா். குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1லட்சத்து 78 ஆயிரத்து 665 வாக்காளா்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டப் பேரவைத் தொகுதியில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 349 வாக்காளா்களும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com