மின் மோட்டாருடன் விலையில்லா தையல் இயந்திரம்: சிறுபான்மை மக்கள் விண்ணப்பிக்கலாம்

மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் பெற சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
மின் மோட்டாருடன் விலையில்லா தையல் இயந்திரம்: சிறுபான்மை மக்கள் விண்ணப்பிக்கலாம்

மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் பெற சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2021-22-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்த மக்களின் பொருளாதார நிலையில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காகவும், அவா்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்தவும் விலையில்லா மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின சமூகத்தைச் சாா்ந்த இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், புத்த மதத்தினா், பாா்சிகள் மற்றும் ஜெயின் இனத்தைச் சாா்ந்த பயனாளிகள், மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் பெற தகுதிகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வயது வரம்பு 20 முதல் 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும். தையல் கலை பயின்றவராக இருத்தல் வேண்டும் மற்றும் தையல் கலை பயின்ற்கான உரிய சான்றிதழ் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ. 1 லட்சமாக இருத்தல் வேண்டும். கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவா் போன்றவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா், சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com