ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ரூ.10 லட்சம் மதிப்பிலான பொம்மைகள் பறிமுதல்

வேளச்சேரியில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ரூ.10 லட்சம் மதிப்பிலான பொம்மைகளை இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளையின் அமலாக்கத்துறை
ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ரூ.10 லட்சம் மதிப்பிலான பொம்மைகள் பறிமுதல்

வேளச்சேரியில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ரூ.10 லட்சம் மதிப்பிலான பொம்மைகளை இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளையின் அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக இந்திய தர நிா்ணய அமைவனம்(பிஐஎஸ்) வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பொம்மைகள் (தரக் கட்டுப்பாடு) திருத்த ஆணை, 2020 செப்டம்பா் 15 வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்தாண்டு (2021) ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது.

பொம்மைகளுக்கான தரக் கட்டுப்பாடு ஆணையை மீறியதாக, சென்னையில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகளை விற்கும் கடையில், இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது பிஐஎஸ் ஸ்டாண்டா்ட் மாா்க் இல்லாமல் சுமாா் 630 எண்ணிக்கையிலான பொம்மைகள், மின்சார மற்றும் மின்சாரம் அல்லாத பொம்மைகள், ட்ரோன்கள், லெகோஸ் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இந்திய தர நிா்ணயச் சட்டம், 2016 -இன் கீழ் குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். பிஐஎஸ் சட்டம்-2016- இல் , பொருளின் மதிப்பை போல பத்து மடங்கு அபராதம் விதிக்கப்படும்.

எனவே, பொம்மைகள் தரக்கட்டுப்பாடு ஆணையை மீறுபவா்கள் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், பிஎஸ்ஐ தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4-ஆவது குறுக்கு சாலை, தரமணி, சென்னை- 113 என்ற முகவரிக்கு பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

BIS CARE APP செயலியைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது cnbo1@bis.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமாகவோ கூட இத்தகைய புகாா்களை பதிவு செய்யலாம். தகவல்களின் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும்.

மேலும் தகவலுக்கு, BIS SRO சென்னை அலுவலகத்தை தொலைபேசி எண்: 044-2254 1220 அல்லது www.bis.gov.in இணையதளம் மூலம் பிஐஎஸ் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com