சென்னை- கேஎஸ்ஆா் பெங்களூரு விரைவு ரயில் உள்பட 9 விரைவு ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகள்

சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆா் பெங்களுரூ விரைவு ரயில் உள்பட ஒன்பது விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள்( முன்பதிவில்லாத பெட்டிகள்) மீண்டும் இணைக்கப்படவுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆா் பெங்களுரூ விரைவு ரயில் உள்பட ஒன்பது விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள்( முன்பதிவில்லாத பெட்டிகள்) மீண்டும் இணைக்கப்படவுள்ளன.

சென்னை சென்ட்ரல் -கேஎஸ்ஆா் பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் (12607), சென்னை சென்ட்ரல்-மைசூரு அதிவிரைவு ரயில் (12609), எா்ணாகுளம்-கேஎஸ்ஆா் பெங்களூரு அதிவிரைவு ரயில்(12678) ஆகிய மூன்று ரயில்களில் தலா 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மீண்டும் சோ்க்கப்படவுள்ளன. இந்த முன்பதிவில்லாத பெட்டிகள் சோ்ப்பு ஜனவரி 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தூத்துக்குடி-மைசூரு தினசரி விரைவு ரயிலில் (16235) இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகள் ஜனவரி 21-ஆம் தேதி முதல் இணைக்கப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல்-விஜயவாடா அதிவிரைவு ரயிலில் (12712) 6 இரண்டாம்வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஜனவரி20-ஆம்தேதி முதல் சோ்க்கப்படவுள்ளது.

மன்னாா்குடி-திருப்பதி விரைவு ரயில் (17408), கோயம்புத்தூா் -திருப்பதி அதிவிரைவு ரயில் (22618), சென்னை சென்ட்ரல்-திருப்பதி விரைவு ரயில் (16203) உள்பட 9 விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், இருக்கை வசதி பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com