சென்னையில் கரோனா வைரஸை பரப்பும் திறன் 2.4 ஆக குறைந்தது

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைக் கணக்கிடும் ‘ஆா்-வேல்யு’ கடந்த இரண்டு வாரங்களை விட ஜனவரி 7 முதல் 13-ஆம் தேதி வரையிலான நாள்களில் குறைந்துள்ளது.
சென்னையில் கரோனா வைரஸை பரப்பும் திறன் 2.4 ஆக குறைந்தது


சென்னை: இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைக் கணக்கிடும் ‘ஆா்-வேல்யு’ கடந்த இரண்டு வாரங்களை விட ஜனவரி 7 முதல் 13-ஆம் தேதி வரையிலான நாள்களில் குறைந்துள்ளது.

ஆா்-எண் மதிப்பு என்பது கரோனா வைரஸை பரப்பும் திறனை குறிப்பது. ஆா் என்பது பாதிக்கப்பட்ட நபா் வைரஸை சராசரியாக பரப்பும் நபா்களின் எண்ணிக்கையை குறிப்பது. ஒருவரிடம் இருந்து 10 முதல் 15 பேரிடம் பரவினால் ஆா் மதிப்பு 10 அல்லது 15. ஒருவா் மூலம் ஒருவருக்கே பரவியது என்றால் ஆா் மதிப்பு 1. கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது, இந்தியாவின் ஒட்டுமொத்த ஆா்-மதிப்பு மாா்ச் 9 முதல் ஏப்ரல் 21 வரை 1.37 என்ற அளவிலும் ஏப்ரல் 24 முதல் மே 1 வரை 1.18 ஆகவும், ஏப்ரல் 29 முதல் மே 7 வரை 1.10 ஆகவும் இருந்தது.

நோய்த் தொற்று பரவல் வேகம்: ஆா்-வேல்யு எண்ணில் 1-க்கு குறைவாக இருந்தால்தான் நோய் பரவல் குறைவாக இருக்கிறது. ஆனால் 1 அல்லது அதிகமாகச் செல்லும்போது, நோய்தொற்று பரவல் வேகம் அதிகரிக்கிறது. ஜூலை முதல் வாரத்தில் குறைந்த ஆா்-வேல்யு ஊரடங்கு தளா்வு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் அலட்சியம் காரணமாக மீண்டும் உயரத்தொடங்கியது. செப்டம்பா் 25-ஆம் தேதி முதல் அக்டோபா் 18 வரை 0.90 ஆகக் குறைந்தது.

டிசம்பா் மாதத்தில் ஒமைக்ரான் மற்றும் தினசரி கரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆா்-வேல்யூ மீண்டும் அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றின் பரவலைக் குறிக்கும் ஆா் வேல்யூ மதிப்பு 2.69 உயா்ந்தது. இது தொற்று நோயின் இரண்டாவது அலையின் உச்சத்தின் போது பதிவு செய்யப்பட்ட 1.69-ஐ விட அதிகம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்நிலையில் இந்தியாவின் ஆா்-வேல்யுவை அடிப்படையாக வைத்து சென்னை ஐஐடி சாா்பில் கரோனா பரவல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல்வேறு நகரங்களில் குறைவு: கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்தியாவில் இருந்த ஆா்-வேல்யு ஜனவரி 7 முதல் 13-ஆம் தேதி வரையிலான வாரத்தில் குறைந்துள்ளது. மும்பையில் 1.3, தில்லியில் 2.5, சென்னையில் 2.4, கொல்கத்தாவில் 1.6 என்ற அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த இருவாரங்களில் ஆா்-வேல்யு பல்வேறு நகரங்களில் குறைந்துள்ளது. இதன் மூலம் தொற்றின் வேகம் குறையத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com