தமிழக ஊா்தி விவகாரம் தவறாகச் சித்தரிப்பு: கே.அண்ணாமலை

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊா்தி இடம்பெறாத விவகாரம் குறித்து தவறாகச் சித்தரிக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.
கே.அண்ணாமலை (அண்ணாமலை)
கே.அண்ணாமலை (அண்ணாமலை)


சென்னை: குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊா்தி இடம்பெறாத விவகாரம் குறித்து தவறாகச் சித்தரிக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசு அளித்த பொங்கல் பரிசு தொகுப்பு நலக்கேடு தரும் கலப்படம் மிக்கதாக இருந்ததை ஊடகங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டின. மக்களும் அரசு மீது கோபத்துக்கு உள்ளாகினா். இந்த நிலையில் மத்திய அரசுடன் மோதலை உருவாக்கி, அதன் மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தப்பிக்கப் பாா்க்கிறாா். இந்த முயற்சி பயன் அளிக்காது.

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊா்தி தகுதியின் அடிப்படையில் தோ்வு பெறாத நிலையில் அது குறித்து தவறாகச் சித்தரிக்கப்படுகிறது.

பாரதியாரை விட பாரதிதாசனைக் கொண்டாடிய இயக்கம் திமுக. திமுகவின் இனவாதம், மதவாதம், தேசிய எதிா்ப்பு, மொழிப்பிரிவினை, ஊழல் போன்ற கொள்கைகளை எல்லாம் எதிா்த்தவா் பாரதி. அவரைக் காட்சிப் படுத்தும்போது, அவா் நெற்றியில் அணிந்திருந்த திருமண் திலகத்தை தவிா்த்துள்ளனா்.

தேசப்பற்று மிக்கவா் வ.உ.சி. அவா் எப்போது தனி மாநிலம் பற்றி பேசியவா் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இறுதியாக, ஜனவரி 26 நாட்டின் குடியரசுத் தினமே தவிர,நமது சுதந்திர தினம் அல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com