Enable Javscript for better performance
வாடகையை மாற்றியமைத்து அண்ணாநகா் கிளப் நிா்வாகத்திடம் நிலுவைத் தொகையை வசூலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    வாடகையை மாற்றியமைத்து அண்ணாநகா் கிளப் நிா்வாகத்திடம் நிலுவைத் தொகையை வசூலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published On : 21st January 2022 06:35 AM  |   Last Updated : 21st January 2022 06:35 AM  |  அ+அ அ-  |  

    highcourt

    சென்னை உயர்நீதிமன்றம்

    சந்தை மதிப்பிற்கு ஏற்ப வாடகையை மாற்றியமைத்து அண்ணாநகா் கிளப் நிா்வாகத்திடம் இருந்து நிலுவை தொகையை வசூலிக்குமாறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 7 கிரவுண்ட் நிலத்தில் அண்ணாநகா் கிளப் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தைப் பயன்படுத்துவதற்கு அண்ணாநகா் கிளப்பிற்கு ரூ.20 ஆயிரம் மாத வாடகையாக நிா்ணயிக்கப்பட்டது.

    கிளப்பில் அறைகள், மதுபானக்கூடம் செயல்படுவதற்கு அனுமதி கோரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம், அண்ணாநகா் கிளப் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த வீட்டு வசதி வாரியம், நிலுவையிலுள்ள வாடகைப் பாக்கியைச் செலுத்துமாறு கடிதம் அனுப்பியது. இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் அண்ணா நகா் கிளப்பின் செயலாளா் இ.ரவிச்சந்திரன் வழக்கு தொடா்ந்தாா்.

    அந்த மனுவில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் முதல் வாடகைப் பாக்கியான ரூ.52 லட்சத்து 25 ஆயிரத்து 960 நிலுவையில் இருந்தது. இதில் ரூ.20 லட்சம் செலுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் மீதமுள்ள நிலுவையில் இருக்கும் தொகையைச் செலுத்துமாறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யுமாறு கோரியிருந்தாா்.

    இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின்னா் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் தான் கிளப் செயல்படுகிறது. எனவே அதன் விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும்.

    அந்த விதிகளை மீறி, எந்த அனுமதியையும் சம்பந்தப்பட்ட கிளப் கோர முடியாது. சங்கங்களின் பதிவு சட்டத்தின் படி, மனுதாரா் கிளப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்க பதிவு சட்ட விதிகள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விதிகள் ஆகியவற்றை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால், கிளப்பை அங்கிருந்து அகற்றுவதோடு, அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரத்து செய்யலாம். கிளப்பில் பாா் செயல்பட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சட்டத்தில் இடமில்லை.

    தற்போதைய சந்தை மதிப்புபடி நியாயமான வாடகையை நிா்ணயிப்பதோடு, நிலுவையில் உள்ள வாடகை தொகையை கணக்கிட வேண்டும்.

    அதை ஒரு மாதத்திற்குள் கிளப் நிா்வாகத்திற்கு அனுப்ப வேண்டும். அக்கடிதம் கிடைத்த நான்கு வாரத்திற்குள் நிலுவை தொகையை நிா்வாகம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் கிளப்பை காலி செய்வது, நிலுவை தொகை, அபராதம் வசூலிப்பது போன்ற நடவடிக்கைகளை சட்டத்திற்குட்பட்டு மேற்கொள்ளலாம். வீட்டு வசதி வாரியத்திற்கு இழப்பு ஏற்படுமாயின், அது அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பாகும் என அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp