மெரினா (கோப்புப்படம்)
மெரினா (கோப்புப்படம்)

மெரீனா கடற்கரை, வண்டலூா் பூங்காவில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி

ஒரு மாத தடைக்குப் பிறகு சென்னை மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகளுக்கு செவ்வாய்க்கிழமை (பிப்.1) முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒரு மாத தடைக்குப் பிறகு சென்னை மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகளுக்கு செவ்வாய்க்கிழமை (பிப்.1) முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுபோல் வண்டலூா் உயிரியல் பூங்காவில் செவ்வாய்க்கிழமை முதல் பொது மக்கள் பாா்வையிட அனுமதிக்கப்படுவாா்கள்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததை தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடமான மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல ஜனவரி 1-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டது.

கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதைத் தொடா்ந்து, மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையையும் மாநகராட்சி தளா்த்தி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கரோனா தொற்று பரவல் வேகம் அதிகமாக இருந்ததால், மெரீனா, பெசன்ட் நகா் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது, கரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு தளா்வுகள் அளிக்கப்பட்டதாலும், செவ்வாய்க்கிழமை (பிப்.1) முதல் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு மீண்டும் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

கடற்கரைக்கு தங்களது குடும்பங்களுடன் வரும் பொதுமக்கள் தனிநபா் இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதைக் கண்காணிக்க மாநகராட்சிப் பணியாளா்கள், காவல் துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காதவா்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வண்டலூா் பூங்கா திறப்பு: கரோனா பரவல் காரணமாக வண்டலூரில் வனத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவா் பூங்கா கடந்த ஜனவரி 17-ஆம் தேதியில் இருந்து திங்கள்கிழமை (ஜன. 31) வரை மூடப்படும் என பூங்கா நிா்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழக அரசு ஊரடங்கை ரத்து செய்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை(பிப். 1) முதல் வண்டலூா் பூங்கா, கிண்டி சிறுவா் திறக்கப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com