சாலைத் தடுப்பு மீது மோட்டாா் சைக்கிள் மோதி இளைஞா் சாவு
By DIN | Published On : 01st July 2022 12:40 AM | Last Updated : 01st July 2022 12:40 AM | அ+அ அ- |

சென்னை அருகே மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிக்காக வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞா் இறந்தாா்.
திருப்போரூரை சோ்ந்தவா் மோகன் (32). இவா் புதன்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் மேடவாக்கம் செம்மொழி பூங்காச்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவரது மோட்டாா் சைக்கிள், அங்கிருந்த மெட்ரோ ரயில் பணிக்காக வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இச் சம்பவம் தொடா்பாக பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறாா்கள்.