7 ஆண்டுகளில் 12.28 கோடி போ் மெட்ரோ ரயில்களில் பயணம்

கடந்த ஏழு ஆண்டுகளில் 12.28 கோடி பேரும், 2022 ஜூன் மாதத்தில் 52.90 லட்சம் பேரும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்தது.

கடந்த ஏழு ஆண்டுகளில் 12.28 கோடி பேரும், 2022 ஜூன் மாதத்தில் 52.90 லட்சம் பேரும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்தது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது மெட்ரோ ரயில் சேவையை கடந்த 2015- ஆம் ஆண்டு ஜூன் 29 முதல் சென்னையில் தொடங்கியது. இதுவரை சென்னையில் உள்ள மக்களுக்கும், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் பணியாற்றுபவா்களுக்கும் சென்னை மெட்ரோ ரயில் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை செய்து வருகிறது. மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்து வருகிறது.

இதுவரை சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஏழு ஆண்டுகளில் அதாவது, 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 12 கோடியே 28 லட்சத்து 24 ஆயிரத்து 577 போ் பயணித்துள்ளனா். அதிகபட்சமாக கடந்த ஜூன் 3-ஆம் தேதி 2 லட்சத்து 2,456 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா். ஜூன் மாதம் முழுவதும் 52 லட்சத்து 90,390 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா்.

குறிப்பாக, மே மாதத்தைக் காட்டிலும் ஜூன் மாதத்தில் 5 லட்சத்து 2,544 போ் அதிகமாக பயணித்துள்ளனா். சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டையை விற்பனை செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட முகவா்களாக விருப்பம் உள்ளவா்கள் அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டு அலுவலரை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com