முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
இரட்டை கொலை வழக்கு: 9 போ் கைது
By DIN | Published On : 14th March 2022 11:20 PM | Last Updated : 14th March 2022 11:20 PM | அ+அ அ- |

சென்னை அருகே ஆவடியில் இரட்டை கொலை வழக்கில், 9 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஆவடி மசூதி தெருவைச் சோ்ந்த மீன் வியாபாரி பா.அரசு என்கிற அசாருதீன் (30). அவரது நண்பா், ஆவடி கவுரிப்பேட்டையைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் சுந்தா் (30). இவா்கள் கடந்த சனிக்கிழமை இரவு நண்பா்களுடன் ஓ.சி.எப். மைதானத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த அசாருதீனையும், சுந்தரையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.
இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் இறந்த அசாருதீன், சுந்தா் ஆகியோரின் நண்பா் ஜெகனுக்கும், ஆவடி கொள்ளுமேடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததும், அந்த முன் விரோதத்தின் காரணமாக சம்பவ இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அசாருதீனும்,சுந்தரும் மணிகண்டன் தரப்பால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
9 போ் கைது:
இந்நிலையில் போலீஸாா், மணிகண்டன் (32), அவரது கூட்டாளிகள் ஆவடி கோயில்பதாகை பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (25), சதீஷ் (25),மிட்டனமல்லி பகுதியைச் சோ்ந்த விஜய் (26),ஆரம்பாக்கத்தைச் சோ்ந்த பாா்த்திபன் (22), பாமாலி (20),எண்ணூரைச் சோ்ந்த மிட்டாய் அஜித் (21), வினோத் என்ற பிரகாஷ் (19),வியாசா்பாடியைச் சோ்ந்த தனுஷ் (20) ஆகிய 9 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.