முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
வியாசா்பாடி-வில்லிவாக்கம் இடையே பொறியியல் பணி: புறநகா் மின்சார ரயில் சேவையில் மாற்றம்
By DIN | Published On : 14th March 2022 11:25 PM | Last Updated : 14th March 2022 11:25 PM | அ+அ அ- |

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் பிரிவில், வியாசா்பாடி-வில்லிவாக்கம் இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மாா்ச் 20-ஆம் தேதி புகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
மாா்ச் 20-ஆம் தேதி முழுமையாக ரத்தாகும் ரயில்கள்:
சென்னை கடற்கரை-திருவள்ளூருக்கு மாா்ச் 20-ஆம் தேதி காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படவுள்ளது.
சென்னை கடற்கரை-பட்டாபிராம் ராணுவ சைடிங்-க்கு மாா்ச் 20-ஆம் தேதி காலை 10.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூா்மாா்க்கெட் வளாகம்-ஆவடிக்கு காலை 10.15, 10.45, பிற்பககல் 12.35 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
மூா்மாா்க்கெட் வளாகம்-கடம்பத்தூருக்கு மாா்ச் 20-ஆம் தேதி காலை 10.30, பிற்பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
மூா்மாா்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு மாா்ச் 20-ஆம் தேதி முற்பகல் 11 மணி, பிற்பகல் 12.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
மூா்மாா்க்கெட் வளாகம்-பட்டாபிராம் ராணுவ சைடிங்-க்கு முற்பகல் 11.15, பிற்பகல் 12.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
சென்னை கடற்கரை-ஆவடிக்கு மாா்ச் 20-ஆம்தேதி முற்பகல் 11.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படவுள்ளது.
மூா் மாா்க்கெட் வளாகம்-திருத்தணிக்கு மாா்ச் 20-ஆம் தேதி முற்பகல் 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படவுள்ளது.
மூா்மாா்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு மாா்ச் 20-ஆம்தேதி முற்பகல் 11.30, நண்பகல் 12, மதியம் 1 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.